ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

வெளிநாட்டுவாழ் நண்பர்கள் கவனத்திற்கு

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதை சமாளிக்கும் விதத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து Flat டிவி (LCD,LED and Plasma) கொண்டு வந்தால் 36.05 சதவீதம் இறக்குமதி வரி கட்டவேண்டும். மத்திய அரசு அறிவிப்பு
ஒரு நாட்டின் பொருளாதரத்தை சீர்படுத்தும் அன்னியச் செலவாணியை அதிகப்படுத்துவதில் இன்று முன்னிற்ப்பது, வளைகுடா வாழ் உழைப்பாளர்களே! அவர்களுக்கு இதுவரை அரசு எந்த சலுகையிம் அழைத்ததில்லை ஆனால் அடி மடியில் கைவைக்காமல் இருந்ததில்லை... அது பிளைட் டிக்கட் ஆனாலும் சரி கஷ்டம்ஸ் கஷ்டங்கங்களானலும் சரி.
கொள்ளையடிச்சு, வரி ஏய்ப்பு செய்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் சிலர் உலக வங்கியில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டுவர வக்கில்லை...
ஊழலில் முழ்கி வாழும் அரசியல் வாதிகள், ஊர் சொத்தை அடித்து தன் வீட்டு உலையில் போடும் அபகரிப்பாளர்கள், கள்ள நோட்டு கும்பல்கள், வரி ஏய்ப்பு செய்யும் வசதியானவர்கள் இவர்களிடம் பிடுங்க வேண்டியதுதானே?
தப்புத் தப்ப சுயநலத்தோட யோசிக்கிறீங்க! ஆக மொத்தம் நீங்க அரசியல் நடத்த...
ஊரில் சிலர் உண்டு கொளூத்து வாழ.. வாழ்வாதாரம் இழந்து வாடும் வளைகுடா தொழிலாளர்கள்தான் கிடைத்தார்களா..?
பாவம்! குடும்பம் இழந்து, குட்டிகள் இழந்து வியர்வை சிந்தி, கடும் குளிரிலும், கொல்லும் வெப்பத்திலும் உழைத்து, கிடைத்த இடை வேளைகளில் கிடைக்கும் நிழலில் கீழே கிடந்து உறங்கி, தினமும் 12 மணி நேரம் உழைத்து கஷ்டப்படும் (lcd LED கொண்டுவரும் வெளிநாட்டினர் வளைகுடா காரர்களே) வெளிநாட்டினர்தான் கிடைத்தார்கள? படுபாவீங்களா?
இந்த விசயம் சம்பந்தப்பட்டவர்கள் காதுகளுக்கு எட்டுமா? எட்டச் செய்வீர்களா?
தயவு செய்து இதற்க்கு யாரும் “LIKE" போடாதீர்கள்... இது வாழ்நாளில் பெரும் பகுதியை தன் தாய்நாட்டில் வாழமுடியாமல், வெளிநாட்டில் தொலைத்து இறுதியில் நோய்வாய்பட்டு ஊர் திரும்பும் வளைகுடா தியாகிகளின் கண்ணீரை கண்டு கொள்ளாமல் தன் மகளுக்கு, மகனுக்கும், மனைவிக்கு என்று வாங்கிக் கொண்டு போகும் பொருள்களுக்கு அநியாய வரி விதித்து, அவன் ஆசையில் மண் அள்ளிப் போடும் செயல். இது கண்டிக்கத்தக்கது என்பதை உண்ர்ந்து இதனை உங்கள் சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக