ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

சனி, 27 நவம்பர், 2021

ஆலந்துரைப்பட்டு குழாய்கள் மூலம் குடி நீர்வழங்க

 பெறுநர்:

உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001
பொருள்: சத்தியவாடி கிராமத்தில் இருந்து ஆலந்துரைப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வசதி வேண்டி தொடர்பாக.
அன்புடையீர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள, சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்) ஆலந்துரைப்பட்டு கிராமத்தில் நிலத்தடி நீர் உப்பு உள்ளதல் சத்தியவாடி கிராமத்தில் இருந்து ஆலந்துரைப்பட்டு குழாய்கள் மூலம் குடி நீர்வழங்க பலஆண்டு பொதுமக்கள் கோரிக் கைவிடுத்துள்ளனர். குழாய்கள் மட்டும் 2,3 முறைகள் அமைத்துள்ளனர் இந்த திட்டத்தின் நிலை என்ன, பணிகள் எப்போது முடியும் திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் விசாரணை நடத்தி இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஒரு புதிய மின்கம்பம் அமைக்க மின்விளக்கு வசதி வேண்டி

சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்)

கடித எண்: TR-BDOF -04/2021 புகார் கடிதம்
நாள்: 20-11-2021
பெறுநர்:
உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001
பொருள்: ஒரு புதிய மின்கம்பம் அமைக்க மின்விளக்கு வசதி வேண்டி விண்ணப்பம்.
வணக்கம்,எங்கள் சிற்றாரில் 60 வீடுகள் உள்ளன. அதில் கிழக்கு மேற்கு தெருவில் விளக்குகள் சரிவர இயங்கவில்லை. நாங்கள் தெருக்களில் மின் விளக்கு இன்றித் துன்புறுகின்றோம். இரவு நேரங்களில் இந்தத் நெருவே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இரவில் பணிக்குச் சென்று விட்டு நேரங்கழித்து வீடு திரும்புவோர் வாகனங்களில் வரும்போது பள்ளம் மேடு தெரியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பெண்களும், குழந்தைகளும் இருளில் வெளியில் வர அச்சமடைகின்றனர். பல திருட்டுகளும் நடைபெறுகிறது, ஆகவே, எங்கள் ஊர்த் தெரு மற்றும் ஊருக்கு வரும் பாதைகளில் போதிய மின்விளக்குகளை அமைத்து தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம் : ஆலந்துரைப்பட்டு இப்படிக்கு
நாள்: 20/11/2021
நிலத்துக்கு அடியில் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்க

 சத்தியவாடி,ஆலந்துரைப்பட்டுகிராமங்களில் நிலத்துக்கு அடியில் கச்சா எண்ணெய்க் குழாய் பதிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி குழாய் பதிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டது

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மோட்டார் பழுதடைந்த

பெறுநர்:
உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001

பொருள்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மோட்டார் பழுது சரி செய்வது தொடர்பாக.
அன்புடையீர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள, ஆலந்துரைப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மோட்டார் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பள்ளி கழிப்பறை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் இல்லாமல் ஆசிரியர் மற்றும் மாணவர் மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தண்ணீர் இல்லாமல் கிராம மக்களுக்கும்
அவதியடைந்து வருகின்றனர்.திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் விசாரணை நடத்தி மின் மோட்டார் பழுது சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

சாக்கடை வசதி வேண்டி

 சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்)

கடித எண்: TR-BDOF -05/2021 புகார் கடிதம்
நாள்: 20-11-2021
பெறுநர்:
உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001
பொருள்: சாக்கடை வசதி வேண்டி விண்ணப்பம்.
அன்புடையீர்,
வணக்கம்,எங்கள் சிற்றாரில் 60 வீடுகள் உள்ளன. அதில் கிழக்கு மேற்கு தெருவில் வசித்து வருகிறோம். சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் தண்ணிர் தேங்கி தொற்று நோய் எற்படுகிறது. எனவே எங்கள் கிராமத்தில் சாக்கடை வசதி அமைத்து கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இடம் : ஆலந்துரைப்பட்டு இப்படிக்கு
நாள்: 20/11/2021
தீவலூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது

சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்)
கடித எண்: TR-BDOF -06/2021 புகார் கடிதம்
நாள்: 20-11-2021
பெறுநர்:
உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்,
விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001
பொருள்: சாலை வசதி வேண்டி விண்ணப்பம்.
அன்புடையீர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள, சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்) ஆலந்துரைப்பட்டு கிராமத்தில் இருந்து தீவலூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தினசரி அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே பழுதடைந்த சாலையை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் : ஆலந்துரைப்பட்டு இப்படிக்கு
நாள்: 20/11/2021
ஆலந்துரைப்பட்டு கிராமத்தில் உள்ள மோட்டார் பழுதடைந்த

சத்தியவாடி ஊராட்சி (ஆலந்துரைப்பட்டு கிராமம்)
கடித எண்: TR-BDOF -07/2021 புகார் கடிதம்
நாள்: 20-11-2021
பெறுநர்:
உயர்திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்
வட்டார வளர்ச்சி அலுவலகம்
விருத்தாசலம் வட்டம்
கடலூர்மாவட்டம் PIN : 606001
பொருள்: மோட்டார் பழுது சரி செய்வது தொடர்பாக.
அன்புடையீர்,
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள, ஆலந்துரைப்பட்டு கிராமத்தில் உள்ள கைப்பம்பு இருந்த இடத்தில் மோட்டார் பழுதடைந்த நிலையில் இருப்பதால் தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் விசாரணை நடத்தி மின் மோட்டார் பழுது சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தது ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இடம் : ஆலந்துரைப்பட்டு இப்படிக்கு
நாள்: 20/11/2021

மயானத்திற்கு செல்ல பாலம்,சாலை அமைத்துக் கொடுக்க
விருத்தாசலம் வட்டத்தில் உள்ள, ஆலந்துரைப்பட்டு
கிராமத்தில் நிலம் புல எண் :¼ ல் 1.0.8.0 ஏர்ஸ் மயானம் அமைந்துள்ளது
கிராமத்தில் மயானத்திற்கு செல்ல பாலம்,பாதை இல்லாமல் விவசாய நிலங்களில் சடலங்களை எடுத்துச் செல்லும் கிராம மக்கள், மயானத்திற்கு செல்ல பாலம்,சாலை அமைத்துக் கொடுக்க அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைக்காலங்களில் யாராவது இறந்துவிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய ஆலந்துறைப்பட்டு ஓடையில் இறங்கி மிகுந்த சிரமப்பட்டு தான் உடலை தூக்கி செல்ல வேண்டும். சில சமயங்களில் 10 அடிக்கு மேல் ஓடையில் தண்ணீர் செல்லும். அப்போது இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும்போது, பாடையின் அடிபகுதியில் கார் டயர்களின் டியூப்களை கட்டிவிடுவோம். பின்னர் ஓடையில் தண்ணீரில் பாடையை இறக்கிவிடுவோம். பாடை தண்ணீரில் மிதந்து செல்லும்போது ஓடையில் இறங்கி நீச்சல் அடித்து கொண்டு பாடையில் கட்டப்பட்ட கயிறை இழுத்து செல்வோம். கரை வந்தவுடன் பாடையை ஓடையில் இருந்து எடுத்து இறந்தவர்களின் உடலை மயானத்தில் அடக்கம் செய்வோம். இதுபோன்று ஒவ்வொரு மழைக்காலத்தின்போது சிரமப்பட்டு வருகிறோம். இந்த ஓடையில் பாலம் கட்டி தரவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்நிலையில் இந்த கிராமத்தில் உயிர் இழப்புகள் ஏற்படும் நேரங்களில் சடலங்களை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது, விவசாய நிலங்களில் வழியாகவே எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. மயானத்துக்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க வேண்டும் என்பதே, கிராம மக்களின் எதிர்பார்ப்பு
ஆனால் எந்த மக்கள் பிரதிநிதிகளும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அரசு அதிகாரிகளும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட ஓடையில் பாலம் கட்டித்தர, மயானத்துக்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிநபர் இல்லக்கழிவறை கட்டுதல்

கடலூர்மாவட்டம், விருத்தாசலம்வட்டத்தில் உள்ள
ஆலந்துரைப்பட்டு கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கே வீடுகளில்கழிவறைகள் எண்ணிக்கைன்அடிப்படையில் தனிநபர்இல்லக்
கழிவறைகட்டுதல்தூய்மைபாரதஇயக்கம் (கிராமம்)
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும், கழிவறை கட்டி
தூய்மையான இந்தியாவை உருவாக்க இத்திட்டத்தின் கீழ்கழிவறை கட்ட உதவவேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிறப்பித்துள்ள தேதி
22/10/2012 அரசாணை நிலை எண்.99 கீழ் பொதுகழிப்பறை
கட்ட திரு. மாவட்டஆட்சியார்அவர்கள்பரிந்துரைசெய்தது
ஆலந்துறைப்பட்ட கிராமத்தில் பொதுகழிப்பறை, தூய்மை
இந்தியாதிட்டம்கழிவறைகள்கட்டித்தர உதவவேண்டும். 

                    ஆலந்துறைப்பட்டு பெரிய ஓடை  

தடுப்பணைதிட்டபணிகள்எப்போதுதொடங்கும்.


ஆலந்துறைப்பட்டு பெரிய ஓடை
கடலூர்மாவட்டம், விருத்தாசலம்வட்டத்தில்உள்ளஆலந்துரைப்பட்டு கிராமத்தில் நிலத்தடிநீர் 600அடிதுளையிட்டும்தண்ணீர்இல்லை

நிலத்தடிநீரைபாதுகாத்திடஆலந்துறைப்பட்டுபெரியஓடைதடுப்பணையும்அமைக்கவேண்டும்.நிலத்தடிநீரைபாதுகாத்திடமாவட்டத்தில்உள்ளஆறுமற்றும்ஓடைகளில்37 இடங்களில்தடுப்பணைகட்டபொதுப்பணித்
துறைசார்பில்அரசுக்குபரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.தினமலர்செய்தித்தாள் 06/12/2012 வெளியானது
உயர்திரு. மாவட்டஆட்சியார்அவர்கள்பரிந்துரைசெய்தது
ஆலந்துறைப்பட்டுபெரியஓடை தடுப்பணைகட்டித்தர உதவவேண்டும்

வெள்ளி, 26 நவம்பர், 2021

ஆலந்துறையீஸ்வரர் கோயில்

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சத்தியவாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். மூலவர் ஆலந்துறையீஸ்வரர் கோயில்

பராமரிப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு காத்திருக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா விரைந்து நடத்திட இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சத்தியவாடி ஆலந்துறையீஸ்வரர் இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான அழகிய பொன்மணி உடனுறை ஆலந்துறையீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.இக்கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 1982ம் ஆண்டு மே 6ம் தேதி அப்போதைய திருச்சி இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை துணை ஆணையர் முத்துவேல், கடலூர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.அதன் பிறகு, முப்பது ஆண்டுகளுக்கும்(2013) மேலாக பராமரிப்பின்றி உள்ள இக்கோவில். இப்போது 4 ஆண்டு முன்
பராமரிப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு காத்திருக்கிறது. கோவில் கும்பாபிஷேக விழா விரைந்து நடத்திட இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் பரிந்துரை செய்தது கும்பாபிஷேக விழா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வியாழன், 14 டிசம்பர், 2017

திங்கள், 28 செப்டம்பர், 2015

சனி, 31 ஜனவரி, 2015

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

புதிதாக விநாயகர் கோவில் பிப்ரவரி 02/02/2015  தை மாதம் 19  தேதி திங்கட்கிழமை காலை மணி 7.33க்கு மேல் 9.10 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 ஆலந்துரைப்பட்டு மக்கள்சார்பில் உங்களை அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்
   

Download File

சனி, 22 நவம்பர், 2014

2015–ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு


ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)
ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை)
ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை)
ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை)
மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)
ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை
ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)
ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)
மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை)
ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை)
ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை)
செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)
செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)
செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)
அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை)
அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை)
அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை)
நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை)
டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை)
டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)