ஆலந்துரைப்பட்டுக்கு வசதி வோண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவில் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஆலந்துரையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக


 ஆலந்துரையீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணியை ஒன்றிய சேர்மன் பார்வையிட்டார். 500 ஆண்டுகள் பழமையான, அழகிய பொன்மேனி உடனுறை ஆலந்துரையீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது, கும்பாபிஷேகத்திற்காக 48 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரம், சுற்றுச்சுவர், சுவாமி, அம்மன் சன்னதிகள் சீரமைப்பு பணி நடக்கிறது. மேலும், பொது மக்களின் பங்களிப்பான 25 லட்சம் ரூபாய் செலவில் தரைத்தளம், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் சன்னதி சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளது. கோவில் திருப்பணிகளை ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன் நேற்று பார்வையிட்டார். ஓய்வு பெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு, அ.தி.மு.க., ஊராட்சி செயலர் பாஸ்கர், பழமலை, குமரேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக